பெண் சிசுக்கொலையை தடுக்க ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
By தருமபுரி | Published on : 07th July 2014 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டத்தில், பெண் சிசுக்கொலை, கருக்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பென்னாகரம் வட்ட மாநாடு
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவர் கே.லட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.திரெளபதி சங்க கொடியேற்றிவைத்தார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டப் பொருளாளர் ஆர்.மல்லிகா,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர்.
இந்த மாநாட்டில், வட்டத் தலைவராக வி.சுதா, துணைத் தலைவராக திரெளபதி, வட்டச் செயலாளராக எம்.வளர்மதி, பொருளாளராக எம்.மங்கை உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் போதிய மருத்துவர்களை நியமித்து உயிர்காக்கும் மருந்துகளை இருப்பில் வைக்கவேண்டும்.
பென்னாகரம் வட்டத்தில் பெண் சிசுக்கொலை, கருக்கொலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பென்னாகரம், பேரூராட்சி மற்றும் கிராமப் புறங்களில் பொது சுகாதாரத்தை காத்து, பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் போதிய கழிப்பட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.