Enable Javscript for better performance
மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மூதாட்டியைக் கொன்று நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    காரிமங்கலம் அருகேயுள்ள சின்னமாட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (70). சலவைத் தொழிலாளியான இவரது கணவர் மாரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு ஹரிராஜ், சிவக்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பணி புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், வெள்ளையம்மாள் சின்னமாட்லாம்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை காலை வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லையாம்.

    இதனால், அருகில் வசிப்பவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனராம். அப்போது, அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியினர் ஏராளமானோர் கொலை நடந்த வீட்டின் முனó திரண்டனர்.

    மேலும், இதுகுறித்து சின்னமாட்லாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முபாரக்அலி, காரிமங்கலம் போலீஸாருக்குத் தகவல் அளித்தார்.

    இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க், காரிமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தலைப் பகுதி நசுங்கிய நிலையில் வெள்ளையம்மாள் சடலமாகக் கிடந்தார். மேலும், அவர் கை, கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் சுமார் 4 பவுன் திருடப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai