Enable Javscript for better performance
ஊத்தங்கரை தொகுதியில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை தொகுதியில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

    By ஊத்தங்கரை  |   Published on : 08th July 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதிகளில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடங்களுக்கு திங்கள்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது.

    ஊத்தங்கரை, எக்கூர், பெரியதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, பாவக்கல், கெங்கப்பிராம்பட்டி, செலக்காரம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களுக்கு மொத்தம் ரூ.87.50 லட்சம் மதிப்பீட்டில் பொருள் இருப்புக் கிடங்குகள், பாவக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

    ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜையை செய்துவைத்தார்.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய அதிமுக செயலர் நாராயணசாமி, மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், மாநில நில வள வங்கி தலைவர் சாகுல் அமீது, பாவக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி பார்த்திபன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கிருஷ்ணன், நகரச் செயலர் பி.கே.சிவானந்தம், பேரூராட்சி உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai