Enable Javscript for better performance
சத்துணவு சமையலர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை அதிக மாத்திரைகள் உள்கொண்டு சத்துணவு சமையலர் துளசி தற்கொலைக்கு முயன்றார்.

    முன்னதாக, அவர் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்த புகார் மனு:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிகிறேன்.

    என்னுடன் பணிபுரியும் சின்னப்பொண்ணு என்மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். இதனால், நானும் என குடும்பத்தினரும் தேவையற்ற பிரச்னைக்கு ஆளாகியுள்ளோம்.

    மேலும், நான் அதே பகுதியில் சேர்ந்த சிலரிடம் கடன் பெற்றேன். அதைத் திருப்பியளித்து விட்ட நிலையிலும், சிலர் என்னை துன்புறுத்தி வருகின்றனர்.

    எனவே, குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளித்து, நான் இடையூறின்றி எனது பணியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai