Enable Javscript for better performance
ஜெயம் வித்யாலய பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்ற எச்.தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    அரூரை அடுத்துள்ள எச்.தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி கே.ஸ்ரீமதிக்கு ரூ.25 ஆயிரமும், இ.நவநீதனுக்கு ரூ.20 ஆயிரமும், மாணவி சி.தன்மதிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசளிக்கப்பட்டது.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் ஜெ.விழிவேந்தன், எஸ்.யாசினி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், பள்ளி அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் எம்.சக்தி, எம்.தேன்மொழி, ஆர்.பிரவீன், வி.விக்னேஷ் ஆகியோருக்கு தலா ரூ.7500-ம், மூன்றாமிடம் பெற்ற எஸ்.கீதாஞ்சலி, ஏ.ரஞ்சனாதேவி, எம்.ஹரிஸ் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியில், உயிரியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது.

    பத்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ.500 பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவில் பள்ளியின் நிர்வாகத் தலைவர் ரத்தினம், பொருளர் முருகேசன், நிர்வாக இயக்குநர்கள் குலசேகரன், கிருஷ்ணன், பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai