Enable Javscript for better performance
நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

     தருமபுரியில் 149 பயனாளிகளுக்கு ரூ.5.40 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    சமூக நலத் துறை சார்பில் தையல் பயிற்சி முடித்த 35 பெண்களுக்கு சான்றிதழ்கள், மகளிர் திட்டம் சார்பில் 2012-13-ஆம் ஆண்டுக்கான இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஊக்கத்தொகை 75 பேருக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 305, புது வாழ்வுத் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள், 3 சக்கர நாற்காலிகள், முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் ஆகியவற்றை ஆட்சியர் கே.விவேகானந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேலு, துணை ஆட்சியர்கள் கிருஷ்ணன், சேதுமாதவன், குப்புசாமி, மாவட்ட சமுக நல அலுவலர் பா.கோட்டீஸ்வரி, புது வாழ்வுத் திட்ட மேலாளர் பத்மாமணி, முன்னாள் படை வீரர் நல இணை இயக்குநர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai