Enable Javscript for better performance
பதவி உயர்வு அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பதவி உயர்வு அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 08th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதவி உயர்வு தொடர்பான அரசாணையில் திருத்தம்

    செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.

    தருமபுரி மாவட்டத்துக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான அரசாணை 720-ஐ திருத்தம் செய்ய வேண்டும்.

    நேரடியாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai