Enable Javscript for better performance
பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளி சுற்றுச் சுவரை சீரமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளி சுற்றுச் சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 08th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என, அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பாப்பாரப்பட்டி-பாலக்கோடு சாலையில் உள்ள இந்தப் பள்ளி சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

    இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ் வழிக் கல்வியுடன் தற்போது ஆங்கில வழிக் கல்வியும் இந்தப் பள்ளியில் கற்றுத் தரப்படுகிறது.

    இந்தப் பள்ளிக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச் சுவர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் நூறு ஆண்டுகளைக் கடந்த பழைமையான வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், பள்ளி சுற்றுச் சுவரின் பின்பகுதி அண்மையில் பெய்த பலத்த மழையில் இடிந்து விழுந்தது.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில், இடிந்த சுற்றுச் சுவரை அகற்றி விட்டு புதிதாகக் கட்ட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தை அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

    இடிந்து விழுந்து பல நாள்களாகியும் சுற்றுச் சுவர் சீரமைக்கப்படாததால் இரவு நேரங்களில் மர்மநபர்கள் பள்ளி வளாகத்திற்கு நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சுற்றுச் சுவரை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai