Enable Javscript for better performance
இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணிக்கும் (28) திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயசெல்வம் ஆகியோர் இண்டமங்கலம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், 17 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடத்து ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேசி திருமணத்தைத் தடுத்து நிறுத்தனர்.

    அதேபோல, பெரியாம்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த இளம் வயது திருமணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    கார் மோதியதில் விவசாயி சாவு

    அரூர், மொரப்பூரில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    அரூர் வட்டம், ராசலாம்பட்டியைச் சேர்ந்தவர் வே.சொக்காசாமி (64). இவர் மொரப்பூரில் நியாய விலைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு தருமபுரி- அரூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது, மொரப்பூர் கலைஞர் நகர் அருகே சென்ற போது, கார் மோதியதில் சொக்காசாமி பலத்த காயமடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தவர் கைது

    தருமபுரி,தருமபுரியில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கக் கோரி, புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

    தருமபுரியைச் சேர்ந்தவர் பி.ஓ.ஜெயபாண்டியன். இவர் இந்தியன் அறிவியல் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

    இவர் தருமபுரியில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நிரந்தரமாக அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஜெயபாண்டியனை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர்.

    போலி மருத்துவர் கைது

    தருமபுரி,தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே போலி மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஞ்சி மகன் சுரேஷ் (28). ஹோமியோபதி மருத்துவப் படிப்பு படித்துள்ள இவர், மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளியில் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தாராம்.

    இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் குணசுந்தரி அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீஸார் சுரேஷை புதன்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai