Enable Javscript for better performance
ஊத்தங்கரை அருகே மணல் கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே மணல் கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது

    By ஊத்தங்கரை,  |   Published on : 10th July 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மணல் கடத்தியதாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். மேலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊத்தங்கரையை அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி ஐந்து கண் ரயில் பாலம் அருகே கல்லாவி காவல் நிலைய ஆய்வாளர் குமரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், ஓட்டுநர் சுரேஷ் (27) கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai