Enable Javscript for better performance
கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை

    By தருமபுரி,  |   Published on : 10th July 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிக்கும் ஸ்கேன் மையங்களின் உரிமையாளர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் கருவின் பாலினம் அறிவித்தல், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி ஸ்கேன் பரிசோதனை தொடர்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:

    பெண் சிசுக் கொலை, பாலினம் அறிதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் அல்லது வேறு எந்த பரிசோதனை மூலம் அறிவிப்பதில்லை என்ற அறிவிப்புப் பலகை அனைத்து ஸ்கேன் மையங்களிலும் வைக்கப்பட வேண்டும்.

    பாலினத் தேர்வை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்களின் உரிமையாளர்கள், மருத்துவ அலுவலர்கள், பணிபுரியும் ஊழியர்கள், கர்ப்பிணிகளின் உறவினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

    ஸ்கேன் மையங்களில் பாலினம் தெரிவிப்பது அல்லது இத்தகைய செயல் தண்டனைக்குரியது என்ற வாசக அட்டை வைக்காத மருத்துவமனைகள் குறித்த புகார்களை 1077 தொலைபேசி மற்றும் ஹய்ற்ண்ண்ய்ச்ஹய்ற்ண்ஸ்ரீண்க்ங்.க்ல்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் வெ.குணசுந்தரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் சிவக்குமார், சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் அண்ணாமலை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், தனியார் மருத்துவமனை ஸ்கேன் மைய மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai