Enable Javscript for better performance
தருமபுரி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

    By தருமபுரி,  |   Published on : 10th July 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ஆம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

    தருமபுரியில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரியில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் மொத்தம் 1068 இடங்கள் உள்ளன.

    இவற்றுக்கான மாணவர்கள் சேர்க்கைகான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மாதம் 18-ஆம் முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 878 இடங்கள் நிரம்பின.

    மீதமுள்ள 190 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரி கூட்டரங்கில் முதல்வர் பெ.கி.பாஸ்கரன் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

    இதில், ஒரே நாளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு, மாணவர்கள் சேர்க்கைக்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai