Enable Javscript for better performance
ரூ.50 லட்சத்தில் \\\"அம்மா\\\' உணவகங்கள்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.50 லட்சத்தில் "அம்மா' உணவகங்கள்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 10th July 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் ரூ. 50 லட்சத்தில் "அம்மா' உணவக கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

    தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கும் "அம்மா' உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் "அம்மா' உணவகங்களை நகராட்சிகளிலும் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதையடுத்து, தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகர்ப் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் "அம்மா' உணவகங்கள் கட்ட தருமபுரி நகராட்சி அண்மையில் முடிவு செய்து இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகர்ப் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் உணவகங்கள் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜைகள் நடைபெற்றன.

    மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் இரு இடங்களிலும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தார்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் ஆர்.சுரபி, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் இளங்கோவன், நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார், நில வள வங்கித் தலைவர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai