Enable Javscript for better performance
விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அலுவலகத்தில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சேலம் கோட்டச் செயலாளர் விஷ்ணுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    விசுவ ஹிந்து பரிஷத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் ஹிந்து எழுச்சி பேரணி நடத்துவது. பசுக்களை அடிமாட்டுக்கு கொண்டு செல்வதை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்தி நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்டச் செயலாளர் பசுபதி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மனோகரன், வாசு, செல்வராஜ், சடகோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai