Enable Javscript for better performance
கார் மோதியதில் இரு பெண்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே கார் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

    தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்துள்ள ஓபுபளிநாயக்கன்கொட்டாய் சேர்ந்த புட்டன் மனைவி ராஜி (60). இவர்களது உறவினர் சாரதா (50).

    இவர்கள் இருவரும் புதன்கிழமை இலக்கியம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

    தருமபுரி- சேலம் சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைகாக ராஜி சேலம் தனியார் மருத்துவமனையிலும், சாரதா பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai