Enable Javscript for better performance
தருமபுரி அருகே ஓட்டுநர் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சீனிவாசன் (24) . லாரி ஓட்டுநர். இவருக்கும், தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்ல

    அள்ளியைச் சேர்ந்த மாது மகள் செல்லக்கிளிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், செல்லகிளியின் சகோதரி தேன்மொழிக்கும், சீனிவாசனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, தேன்மொழியின் கணவர் மாரிமுத்துவுக்கும், சீனிவாசனுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுமாம்.

    இந்த நிலையில், ராஜகொல்லஅள்ளியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சீனிவாசன் செல்லக்கிளியுடன் புதன்கிழமை வந்தாராம். அப்போது, தேன்மொழியும் உடன் வந்தார்.

    இதுகுறித்து அறிந்த மாரிமுத்து அங்கு வந்து சீனிவாசனிடம் தகராறு செய்தார். இதில், மாரிமுத்து திடீரென சீனிவாசனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாராம்.

    பலத்த காயமடைந்த சீனிவாசனை அவரது உறவினர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து வியாழக்கிழமை சரணடைந்தார்.

    இதையடுத்து, அவர் தருமபுரி மாவட்டம், இண்டூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து செய்து மாரிமுத்துவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai