Enable Javscript for better performance
ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ரயிலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

    தருமபுரி அருகே உள்ள கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாதம்மாள் (42). இவர் தூத்துக்குடியிலுள்ள தனது மகளின் வீட்டுக்கு உறவினர்களுடன் சென்றார்.

    பின்னர், அங்கிருந்து தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயில் மூலம் புதன்கிழமை திரும்பினார். அப்போது வியாழக்கிழமை அதிகாலை தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் மாதம்மாள் இறங்கினார். இதில், திடீரென கால் இடறி அவர் ரயில் பாதையில் விழுந்தார்.

    அப்போது ரயில் புறப்படத் தொடங்கியது. இதில், ரயிலின் சக்கரத்தில் சிக்கிய மாதம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai