Enable Javscript for better performance
விஷமருந்தி தம்பதி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே விஷமருந்தி தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

    மாரண்டஹள்ளி அருகே உள்ள போயர் கொட்டாய் அத்திமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்றாயன் (65). இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் மனைவி கல்யாணிக்கும் இடையே (45) தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஊரை விட்டு வெளியேறி தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பிய இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

    சம்பவ இடத்துக்குச் சென்ற மாரண்டஹள்ளி போலீஸார், இருவரது சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai