Enable Javscript for better performance
அரசு மருத்துவமனை முன்பாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனை முன்பாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 12th July 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலின் முன் இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    தருமபுரி- சேலம் சாலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகள் பிரிவுக் கட்டடம், புற நோயாளிகள் பிரிவுக் கட்டடம் எனத் தனித்தனி கட்டடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் உள் நோயாளிகள் கட்டடம் 5 தளங்களுடன் 500 படுக்கை வசதி கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற வருகின்றனர்.

    மேலும், தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்து, உடல் நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவுக் கட்டடத்துக்குச் செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஓரத்தில் உள்ள நுழைவு வாயில் வழியாகச் செல்கிறது.

    அவ்வாறு வரும்போது, அந்த நுழைவு வாயிலின் முன் ஆட்டோக்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மருத்துவமனையின் உள்ளே வருவதில் இடையூறு ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சில நேரங்களில் சிகிச்சைப் பெற தாமதமாகிறது.

    எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக நுழைவு வாயிலின் முன் நிறுத்தப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அப்புறப்படுத்த போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai