Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரையை அடுத்துள்ள வீரியம்பட்டி கூட்டுச் சாலைப் பகுதியை சேர்ந்த முரளிதரன் வியாழக்கிழமை படப்பள்ளியில் உள்ள ஆலையின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    ஊணாம்பாளையத்தை சேர்ந்த பொன்னுரங்கம், தனியார் மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai