Enable Javscript for better performance
ஏற்றுமதித் தொழில் தொடங்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஏற்றுமதித் தொழில் தொடங்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும்

    By தருமபுரி,  |   Published on : 12th July 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் ஏற்றுமதித் தொழில்கள் தொடங்க தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வலியுறுத்தினார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம் சார்பில் ஏற்றுமதி தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கருத்தரங்கை தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:

    தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மாம்பழம், தேங்காய், சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்ய அந்தத் தொழிலில் ஈடுபடுவோர் முன்வர வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழில்கள் தொடங்கி தருமபுரியைத் தவிர, மற்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் பின்தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் தொழில்கள் தொடங்குவோருக்கு அரசு மானியம், சலுகைகள், ஊக்க உதவி வழங்கி வருகிறது.

    இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், சிப்காட், இரண்டு சிட்கோக்களை அரசு அறிவித்துள்ளது. இதில், பருவதனஅள்ளி, அரூர் ஈச்சம்பாடி ஆகிய சிட்கோ பணிகள் முடிவுற்று தொழில் தொடங்க தயாராக உள்ளது.

    எனவே, தருமபுரி மாவட்ட தொழில் முனைவோர் வங்கிக் கடன், மானியம் ஆகிய சலுகைகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில், புதுவாழ்வுத் திட்டம் சார்பில் சணல் பை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்குளுக்கு ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இந்தக் கருத்தங்கில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு துணை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர்

    சி.ஆர்.கோபிகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் என்.ஜெயபாலன், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai