Enable Javscript for better performance
ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர பணம் பெற்று ஏமாற்றிய 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர பணம் பெற்று ஏமாற்றிய 2 பேர் கைது

    By தருமபுரி  |   Published on : 12th July 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பணம் பெற்று ஏமாற்றிய இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    பஞ்சப்பள்ளி சின்னாறு அணைப் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் மணிகண்டன் (27). கூலித் தொழிலாளியான இவரும், ஓகேனக்கல்லைச் சேர்ந்த அவரது உறவினர் மெரினும் ஓட்டுநர் உரிமம் பெறுவற்காக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவமூர்த்தி, உமாதீன் அவரது மகன் பக்ருதீன் ஆகியோரிடம்

    தலா ரூ.10 ஆயிரம் கொடுத்தனர்.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட இவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்தனராம்.

    இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி, பக்ருதீன் இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடம் இருந்து 2 போலி ஓட்டுநர் உரிமங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான உமாதீனைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai