Enable Javscript for better performance
குடும்பத் தகராறில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குடும்பத் தகராறில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

    By தருமபுரி,  |   Published on : 12th July 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அருகே குடும்பத் தகராறில் தம்பதி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

    தருமபுரி அருகே கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அம்சா (44). இவர்களது மகன்கள் சிங்காரவேல் (22), விஷ்ணு (19).

    குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், மகன்கள் இருவரும் வேலைக்கு வெளியூர் சென்ற நிலையில் வியாழக்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்து வெளியே சென்ற அம்சா வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai