Enable Javscript for better performance
நத்தம் காலனியை சேர்ந்த 6 பேர்தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் காலனியை சேர்ந்த 6 பேர்தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

    By தருமபுரி,  |   Published on : 12th July 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நத்தம் கானியை சேர்ந்த 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம் காலனியை சேர்ந்த கோபால் மகன் சங்கர் (35), சிவலிங்கம் மகன் அதியமான் (30), பாலிடெக்னிக் மாணவர் சி.சந்தோஷ் (19), எஸ்.சக்தி (38), மொ.துரை (47), கோ.அசோகன் (27) ஆகிய 6 பேர் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் கூறி, ஜூன் மாதம் 28-ஆம் தேதி இரவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில், சிறையில் உள்ள 6 பேரை அண்மையில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து, போலீஸ் விசாரணை முடிந்து அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், சிறையில் உள்ள 6 பேரையும் வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல்களை சிறையில் உள்ள 6 பேரிடம் போலீஸார் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai