பேரிடர் தடுப்பு ஒத்திகை
By தருமபுரி, | Published on : 12th July 2014 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையில் தீயணைப்புத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை பேரிடர் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், ஆறு, ஏரி, அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் தவறி விழுந்தவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்பது, வெள்ள அபாயக் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்ளிட்டவை செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், தொப்பையாறு அணை, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் தீத்தடுப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த முகாமில், தீத் தடுப்பு அலுவலர் ராஜகோபால், தீயணைப்பு, மீட்புத் துறையினர் கலந்து கொண்டனர்.