Enable Javscript for better performance
\\\"வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் வருகிற 14-ஆம் தேதி நடத்த உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அண்ணா தொழில்சங்கம் வலியுறுத்தியது.

    இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க அண்ணா தொழில்சங்கப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பத்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் விற்பனையாளர்கள், எடையாளர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, அண்ணா தொழில்சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடம் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்

    துவக் காப்பீடு விரைவில் அளிக்க உள்ளார்.

    எனவே, வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழில்சங்கப் பணியாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.

    மேலும், அன்றைய தினம் வழக்கம்போல தங்களது பணிகளுக்குச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai