Enable Javscript for better performance
ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்

    By அரூர்  |   Published on : 13th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |    |  

    பள்ளி, கல்லூரிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொண்டேஇருக்க வேண்டும் என, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

    அரூரை அடுத்த செக்காம்பட்டி பி.டி.ஆர் கல்வி நிறுவன கல்வியியல் கல்லூரிகளின் (பி.எட்) பட்டமளிப்பு விழா, அரூரில் அந்தக் கல்வி நிலைய நிறுவனர் தலைவர் இரா.தமிழ்மணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:

    தொடக்க வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவருமே நாள்தோறும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

    அப்போதுதான் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை அளிக்க முடியும்.

    இன்றைய காலக்கட்டத்தில் கணினி, வலைதளம், இணைய தளங்களின் பயன்பாடு மிகவும் அவசியமாகிறது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும் கணினி, இணையதளம் தொடர்பான அறிவுரைகளை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும்.

    அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகின்றன. உயர்கல்வி படிப்பதற்குத் தேவையான ஊக்கத்தொகைகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. எனவே, கல்வி கற்க ஏழ்மை என்பது ஒரு தடையல்ல.

    கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்கள், ஆசிரியராகப் பணியில் இருக்கும் போது மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும். கல்வி அறிவால் மட்டுமே சமூக மாற்றமும், நாட்டின் வளர்ச்சியும் சாத்தியம் என்றார் மாவட்ட ஆட்சியர்.

    தொடர்ந்து, பி.டி.ஆர். வெள்ளச்சியம்மாள் கல்வியியல் கல்லூரி, பி.டி.ஆர். கல்வியியல் கல்லூரி, பத்மாவதி கல்வியியல் கல்லூரிகளில் 2012-13-ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் 300 பேருக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வழங்கினார்.

    விழாவில், பி.டி.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டி.பொற்கொடி மோகன், நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் என்.வெங்கடேஷ்வர்லு, ஆர்.திருநாவுக்கரசு, டி.குமரேசன், கல்லூரி மாணவ, மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp