Enable Javscript for better performance
ஊத்தங்கரை அருகே முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி கண்டெடுப்பு

    By ஊத்தங்கரை  |   Published on : 13th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரை அருகே முள்புதருக்குள் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை வனத் துறையின் கண்டெடுத்தனர்.

    ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இளவம்பாடி காப்புக் காட்டு பகுதியில் வனவர் மகேந்திரன், வனக் காப்பாளர் அசோகன் ஆகியோர் சனிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலவன் நகர் அருகே சென்ற போது முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி கிடப்பதைக் கண்ட வனவர் மகேந்திரன், அதை மீட்டு சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai