Enable Javscript for better performance
கிணறு தோண்டிய போது வெடி வெடித்ததில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிணறு தோண்டிய போது வெடி வெடித்ததில் தொழிலாளி சாவு

    By அரூர்  |   Published on : 13th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சனிக்கிழமை கிணறு தோண்டிய போது வெடி வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

    அரூர் வட்டம், ஈட்டியம்பட்டி பூநகரைச் சேர்ந்த விவசாயி பெரியதம்பி மகன் சேட்டு. இவரது விவசாய நிலத்தில் திறந்தவெளிக் கிணறு தோண்டும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது.

    கிணற்றில் கடினமான பாறைகளை உடைப்பதற்காக வெள்ளிக்கிழமை கம்பரசர் வழியாக குழி போட்டு ஜெலட்டின், டெட்டனேட்

    டர்கள் மூலம் வெடி வைத்தனர்.

    இந்தக் கிணற்றில் 20-க்கும் மேற்பட்ட குழிகளைப் போட்டு வெடி வைத்தனர். அதில், ஒரு குழியில் இருந்த வெடி மட்டும் வெடிக்கவில்லையாம்.

    இந்த நிலையில், ஏற்கெனவே குழி போட்டு மருந்து வைத்திருந்த துளையில் மீண்டும் கம்பரசர் இயந்திரம் வழியாக குழி போட்டனராம். அப்போது, அதில் இருந்த வெடிமருந்து வெடித்ததில், கொத்தனாம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி

    க.குழந்தை (42) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அவருடன் கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஈட்டியம்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் இளங்கோ (37), பெரியதம்பி மகன் குணம் (33) ஆகியோர் காயமடைந்தனர்.

    இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai