Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி பேரணியில் வேளாண் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பங்கேற்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி பேரணியில் வேளாண் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பங்கேற்க முடிவு

    By தருமபுரி  |   Published on : 13th July 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள பேரணியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தினர், நியாய விலைக் கடை பணியாளர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.கே.நரசிம்மன் வெளியிட்ட அறிக்கை:

    புதிய ஊதிய ஒப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற திங்கள்கிழமை (ஜூலை 14) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பேரணி நடத்தி ஆட்சியர் மூலம் முதல்வருக்கு மனு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

    தருமபுரியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மாற்றுத் தொழில் சங்கத்தினர் விடுக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் அவர்.

    அதியமான்கோட்டையில்

    "அம்மா' திட்ட சிறப்பு முகாம்

    தருமபுரி, ஜூலை 12: அதியமான்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட சிறப்பு முகாமில் 134 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த முகாமிற்கு தனி வட்டாட்சியர் கோபெருந்தேவி தலைமை வகித்தார். பட்டா மாறுதல், வருவாய், இருப்பிடம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 134 மனுக்கள் அளிக்கப்பட்டன. 99 பயனாளிகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் முனுசாமி, ஊராட்சித் தலைவர் ஏ.சண்முகம், வருவாய் ஆய்வாளர் ஆ.பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai