Enable Javscript for better performance
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 13th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், எம்பில், ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2014-15ஆம் ஆண்டுக்கான மேல்படிப்பு கல்வி உதவித் தொகை பெற ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ஆம் தேதி வரையும், புதுப்பிக்க அக்டோபர் 10ஆம் தேதி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டில் 18,989 மாணவர்களுக்கு புதிதாக கல்வி உதவித் தொகை அளிக்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண், சாதி, வருமானச் சான்றின் நகலுடன் இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை இணைத்து, பயிலும் கல்வி நிலையங்களில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள்ளும், புதுப்பிப்பவர்கள் அக்டோபர் 20ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இதை கல்வி நிறுவனங்கள் பரிசீலனை செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். இதில், புதிதாக கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் கையொப்பமிட்டு அனைத்து சான்றுகளையும் அக்டோபர் 5ஆம் தேதிக்குள்ளும், ஏற்கெனவே உதவித் தொகை பெறுவோரின் விண்ணப்பங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai