Enable Javscript for better performance
பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்:பொதுமக்களுக்கு மின் வாரியம் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்:பொதுமக்களுக்கு மின் வாரியம் வேண்டுகோள்

    By தருமபுரி,  |   Published on : 13th July 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற இருப்பதை முன்னிட்டு ஏற்படும் மின் தடங்கலுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளர் பி.மு.ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் மின் கட்டமைப்பில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், தொய்வடைந்த மின் பாதைகளால் மழை, புயல் காலங்களில் பொதுமக்களுக்கு

    மின் விபத்து, மின்

    தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி கோட்டத்துக்குள்பட்ட தருமபுரி நகர், கடத்தூர், பிடமனேரி, ராஜாபேட்டை, இலக்கியம்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, பாளையம்புதூர், சோலைக்கொட்டாய், கிருஷ்ணாபுரம், புலிகரை, இண்டூர், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சுற்றியுள்ள பகுதிகளில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை வருகிற 16ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் போர்க்கால அடிப்படையில்

    மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அப்பொழுது ஏற்படும் மின் தடங்கலுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai