Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த விவசாயிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் - Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த விவசாயிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

    By அரூர்,  |   Published on : 14th July 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த விவசாயிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஒபிலிநாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஓசன் மகன் வீரபத்திரன் (45). இவரது விவசாய நிலத்தில் அண்மையில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

    புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், ஒபிலிநாய்க்கன்ஹள்ளி கிராமத்தில் அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் எம்.ரவிச்சந்திரன் தணிக்கை மேற்கொண்டார்.

    அதில், அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த விவசாயி வீரபத்திரனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த ஆழ்துளைக் கிணறு அமைத்த போர்வெல் லாரியைப் பறிமுதல் செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்தச் சம்பவம் குறித்து ராமியணஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் ஜெ.குமார் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai