Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

    By போச்சம்பள்ளி  |   Published on : 14th July 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார்.

    போச்சம்பள்ளி அருகேயுள்ள வேடர்தட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தப்ப நாயுடு. இவரது மனைவி பாப்பம்மாள் (74). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது.

    இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் அந்தப் பகுதியில் பாப்பம்மாள் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

    இதைப் பார்த்த பொதுமக்கள் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

    மொரப்பூரில் இளைஞர் மர்மச் சாவு

    அரூர், ஜூலை 13: மொரப்பூரில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அரூர் வட்டம், ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மார்க்கண்டன் மகன் பிரபாகரன் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆவடியில் இருந்து ரயில் மூலம் மொரப்பூர் வந்ததாகத் தெரிகிறது.

    இந்த நிலையில், மொரப்பூர்-சேலம் ரயில்வே வழித் தடத்தில், சிங்காரவேலன் கோயில் எதிரே ரயில் பாதையில் பிரபாகரன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai