Enable Javscript for better performance
குருமன்ஸ் நலச் சங்கச் செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட குருமன்ஸ் நலச் சங்கச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு சங்கத் தலைவர் டி.ராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எல்.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில், தருமபுரி மாவட்டத்தில் குருமன்ஸ் இன மக்களுக்கு எதிராக செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வருவதோடு, உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை வெளியிட்டு ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தருமபுரி மாவட்ட மலையாளி பேரவை செயல்பாடுகளையும், அதன் மாநிலத் தலைவர் ஸ்டான்லி முருகேசன், பேரவையின் உறுப்பினர்கள் குணசேகரன், குபேந்திரன் ஆகியோரைக் கண்டிப்பது, மலையாளி பேரவையின் செயல்பாடுகளுக்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் டி.மாதையன், துணைத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai