Enable Javscript for better performance
தருமபுரியில் நாளை கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் நாளை கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம்

    By தருமபுரி  |   Published on : 14th July 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 15) கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சிப் பெற்று, உயர்கல்வி பயில உள்ள மாணவ, மாணவிகள் கல்விக் கடனை எளிதாகப் பெற உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் வங்கி அலுவலர்கள், மாவட்டக் கல்வித் துறை, மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளனர். தகுதி உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்த முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை}15) காலை 10 மணியளவில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன.

    எனவே, தருமபுரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்று, தற்போது உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், சேர உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயனடைய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai