Enable Javscript for better performance
தருமபுரியில் 144 தடை உத்தரவைதிரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் 144 தடை உத்தரவைதிரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 14th July 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டுப் பிரிவு செயற்

    குழுக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரா.பிரவிண்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் வீரபாண்டி கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.

    மறைந்த ஆடிட்டர் வி.ரமேஷ் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை வருகிற 19-ஆம் தேதி கடைப்பிடிப்பது, திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்திலிருந்து 10 பேரை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai