Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டியில் இ.ஆர்.கே. மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு இ.ஆர்.கே. கல்வி நிறுவனத் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். பேரணியை வட்டாட்சியர் எம்.ரவிச்சந்திரன் தொடக்கிவைத்தார் .

    வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீரை சேகரிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் பேரணி சென்றனர். பாப்பிரெட்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.

    காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமநாதன், வ.சந்திரசேகரன், இ.ஆர்.கே. கல்லூரி முதல்வர் பெ.மாது, துணை முதல்வர் டி.சக்தி, நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், ஒருங்கிணைப்பாளர் கோ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai