Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இரு இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சையத்கைசர் (22), சுகேல் (23). இவர்கள் இருவரும் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்றனராம்.

    இதுகுறித்து இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தின் உரிமையாளர் சிரஞ்சீவி, பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனங்களை திருடியதாக சையத்கைசர், சுகேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai