Enable Javscript for better performance
இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திங்கள்கிழமை நடைபெற இருந்த இளம் வயதுத் திருமணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). இவரது 17 வயது மகளுக்கும், மாரண்டஹள்ளி அருகே கத்திக்கோல்மேட்டைச் சேர்ந்த ஜெ.முருகனுக்கும் திங்கள்கிழமை நடைபெறுவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி ஜக்கசமுத்திரத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், இளம் வயது திருமணம் நடைபெறுவது தெரியவந்தது.

    இதையடுத்து, இளம் பெண்ணின் பெற்றோருக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai