Enable Javscript for better performance
துப்பாக்கி கொள்ளை வழக்கு:விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கி கொள்ளை வழக்கு:விசாரணை ஒத்திவைப்பு

    By தருமபுரி,  |   Published on : 15th July 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதியமான்கோட்டை

    காவல் நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு 5 துப்பாக்கிகள், ஒரு வாக்கி டாக்கி கொள்ளையடிக்கப் பட்டன.

    இதுதொடர்பாக 3 போலீஸார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-இல் நடைபெற்று வருகிறது.

    நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

    குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் ராஜா, ராஜமாணிக்கம், தங்கவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்னல் சக்தி, அம்பேத்வளவன் ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

    வழக்கு விசாரணையை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai