Enable Javscript for better performance
துப்புரவு, விசைப்பம்பு இயக்குவோர் முற்றுகைப் போராட்டத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவு, விசைப்பம்பு இயக்குவோர் முற்றுகைப் போராட்டத் திட்டம்

    By தருமபுரி,  |   Published on : 15th July 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துப்புரவு, விசைப்பம்பு இயக்குபவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் மாதம் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஊராட்சி குடிநீர், விசைப்பம்பு இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள்கள் சங்கக் கூட்டம் அந்தச் சங்கத்தின் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.அண்ணாமலை தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலர் எம்.மாதேஸ்வரன், மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொதுப் பணியாளர்கள் சங்கச் செயலளர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மாவட்டச் செயலர் எம்.ராதாகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பித்தார்.

    அனைத்துப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

    மாவட்டத்தில் பணியாற்றும் விசைப்பம்பு இயக்குபவர்களுக்கு ஒரே சீரான ஊதியம் ரூ.2,840 அளிக்க வேண்டும், கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை இடைக்கால ஊதியம் வழங்குவது, துப்புரவுப் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குபவர்களுக்கு சீருடை, கையுறை உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் மாதம் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai