Enable Javscript for better performance
புரட்சி பாரதம் கட்சி பொறுப்பாளர் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் தேவதாஸ் (46) மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அரூர் வட்டம், கொமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னையன் மகன் தேவதாஸ் (46). இவர் புரட்சி பாரதம் கட்சியின் தருமபுரி மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜாவுக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தேவதாஸ் மீது ஒரு கும்பல் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இதில், தலைப் பகுதியில் காயமடைந்த தேவதாஸ் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கொமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா, சுந்தரம், பிரசாந்த், செட்டியார், குட்டிபாபு (எ) தண்டபாணி, பழனிசாமி, காளிதாஸ், மாரியப்பன் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai