Enable Javscript for better performance
மொரப்பூரில் புள்ளிமான் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத் துறையினர் திங்கள்கிழமை மீட்டனர்.

    அரூர் வட்டம், மொரப்பூர் சந்தைமேடு அருகே அருணாசலம் என்பவரின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் தவறி உள்ளே விழுந்தது.

    தகவலறிந்த மொரப்பூர் வனச் சரகர் என்.ஆறுமுகம் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் புள்ளிமானை மீட்டனர்.

    மீட்கப்பட்ட மானுக்கு 3 வயதிருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

    பின்னர், அந்த புள்ளிமான் அரூர் காப்புக் காட்டில் கொண்டு போய் விடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai