Enable Javscript for better performance
வியாபாரி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள டி.ஆண்டியூரில் வியாபாரியின் வீட்டை திறந்து

    14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரூர் வட்டம், டி.ஆண்டியூரைச் சேர்ந்தவர் கு.கனகசிவம் (62). மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

    இவர் இருளப்பட்டி காணியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சென்றார். கோயிலுக்குச் சென்ற போது வீட்டின் பூட்டி, வீட்டுக்கு வெளியே உள்ள மோட்டார் அறையில் சாவியை வைத்துச் சென்றதாக தெரிகிறது.

    கோயிலில் இருந்து திரும்பிய போது வீட்டின் பீரோவிலிருந்த 14.75 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    கனகசிவம் கோயிலுக்குச் சென்றிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தெரிவித்தாராம்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். அரூர் டிஎஸ்பி வி.சம்பத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai