Enable Javscript for better performance
அரூரில் கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்: அதிகாரிகள் பங்கேற்கததால் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்: அதிகாரிகள் பங்கேற்கததால் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்

    By dn  |   Published on : 16th July 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூரில் நடைபெற்ற கல்வி கடன் விழிப்புணர்வு முகாமில் அரசு அதிகாரிகள் பங்கேற்கததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

     தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சிப் பெற்று, உயர்கல்வி பயில உள்ள மாணவ, மாணவிகள் கல்விக் கடனை எளிதாகப் பெற உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவல வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்திருந்தார்.

     இந்த முகாம்களில் வங்கி அலுவலர்கள், மாவட்டக் கல்வித் துறை, மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளனர். தகுதி உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

     தருமபுரி மாவட்டத்தில் சமூதாய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள  மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒருதடையாக இருக்க கூடாது என்பதற்காக கல்வி கடன்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நடத்தப்படுகிறது.

     தருமபுரி மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று, தற்போது  உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், சேர உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

     அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கல்வி கடன் விழிப்புணர்வு முகாமில் கடன் கோரும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றிருந்தனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. ஆனால் வங்கிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்கவில்லை.

     இதனால் கடனுதவி கோரி வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது மனுக்களை இந்த முகாமில் பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்து விட்டு சென்றதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai