Enable Javscript for better performance
அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா

    By dn  |   Published on : 16th July 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

     அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகம் எதிரே அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு கக்கன்ஜி, காமராஜர் சேவா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பி.ஏ.குமரேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சி.தங்கவேல், ஆர்.சக்திவேல், வட்டாரத் தலைவர் கே.ஆர்.சிவலிங்கம், நகரத் தலைவர் வேடியப்பன், வழக்குரைஞர் எம்.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாயி பிரிவு மாவட்டத் தலைவர் பி.மாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியினர் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், எழுதுபொருள்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பி.லிங்கேஸ்வரி, நாசர், தனசாமி, ஜெயகாந்தன், செந்தில், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு அந்த கல்வி நிறுவனத்தின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். விழாவில் அரூர் டிஎஸ்பி வி.சம்பத், வினாயகா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி தாளாளர் ப.விஸ்வநாதன், ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் மு.சண்முகம், ஏ.நடராசன், நூலகத்துறையைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பெ.மாது, துணை முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், உதவிப் பேராசிரியர்கள் க.மேகலா, கோ.புவனேஸ்வரி, க.சங்கீதா, ந.கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    பாப்பிரெட்டிப்பட்டியில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு ஊர்வலத்தை அந்த கல்வி நிறுவனத்தின் தாளாளர் வி.முருகேசன் தொடக்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண் கல்வி குறித்து முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவ, மாணவியர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி கல்வி நிறுவன செயலர் பிரு.ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

     கணபதிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப் பள்ளி தலைமை ஆசிரியை டி.காந்தா தலைமை வகித்தார். பெருந்தலைவரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கீழ்மொரப்பூர் ஊராட்சித் தலைவர் கோபால் பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai