Enable Javscript for better performance
ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதிக்கு 4 ஆண்டாக மின்சாரக் கட்டணம் செலுத்தாதது தெரியவந்ததால் கட்டட உரிமையாளர் அதிர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதிக்கு 4 ஆண்டாக மின்சாரக் கட்டணம் செலுத்தாதது தெரியவந்ததால் கட்டட உரிமையாளர் அதிர்ச்சி

    Published on : 16th July 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் வாடகைக்கு பெற்ற கட்டடத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை 4 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தாத விவரம் கட்டட உரிமையாளருக்கு தற்போது தெரியவந்துள்ளது.

    தருமபுரி பிடமனேரி செல்லும் சாலையில் ஓய்வு பெற்ற வேளாண்துறை ஊழியர் கே.சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவியர் விடுதி கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வந்துள்ளது. மாத வாடகை ரூ.6,100 என்ற ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி விடுதி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, காலியான கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதியை தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விட சுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார். அப்போது, கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விடுதியை காலி செய்த காலம் வரையிலான 4 ஆண்டுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மின் இணைப்பு ரூ.2.35 லட்சம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் 7 மாதத்துக்கு வாடகை பாக்கியும் கொடுக்கப்படவில்லையாம்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் கூறியது: மின்சாரம் உபயோகத்துக்கான கட்டணத்தை தனிநபர் கட்டவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கும் மின்சார வாரிய அதிகாரிகள் 4 ஆண்டுகளாக கட்டணத்தை செலுத்தாத போதும் கண்டுகொள்ளாமல் எப்படி விட்டனர் என்பது புரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அரசிடம் இருந்து ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் மின்சாரக் கட்டணம் மற்றும் 7 மாத வாடகை பாக்கித் தொகை தரப்படும் என தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

    இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர் மணியிடம் கேட்டதற்கு, வாடகை பாக்கி மற்றும் மின்சார கட்டணத் தொகைக்கு அரசிடமிருந்து ஒதுக்கீடு வரப்பெற்றும் கட்டட உரிமையாளருக்கு செலுத்தப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai