Enable Javscript for better performance
குடிநீர் தட்டுப்பாடு: அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் தட்டுப்பாடு: அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

    By dn  |   Published on : 16th July 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

     அரூர் ஒன்றியம், கொளகம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது ஒட்டப்பாளையம். இவ்வூரில் 75-க்கும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் போடப்படவில்லையாம். இதனால் இங்குள்ள மக்கள் நாள்தோறும் குடிநீர் தேவைக்காக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இவ்வூராட்சியல் போதிய அளவில் தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லையாம்.

     இது குறித்து கொளகம்பட்டி ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனைக் கண்டித்து அவ்வூரைச் சேர்ந்த விவசாயி பச்சையப்பன் தலைமையில் ஜூலை 21-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் சார்பில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

     அப்போது அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கு.உமாராணி உரிய பதில் அளிக்காத காரணத்தால் ஒட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

     தொடர்ந்து, இக் கோரிக்கையை வலியுறுத்தி அரூர் கோட்டாட்சியர் ஆர்.சந்திரசேகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

     இது குறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கு.உமாராணியிடம் கேட்டபோது, கொளகம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டப்பாளையம் கிராமத்தில் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுவது விசாரணையில் தெரியவந்தது. இதனையெடுத்து அவ்வூரில் ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க பணியாளர்கள் அனுப்பபட்டு கைப்பம்புகளை சரிசெய்யவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai