Enable Javscript for better performance
தருமபுரியில் இழப்பீடு வழங்காத 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத இரண்டு அரசுப் பேருந்துகளை நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், ஏ.பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை(26). கார் ஓட்டுநரான இவர் கடந்த 2011ஆம் ஆண்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஒசூர் அருகே சானமாவு என்ற இடத்தில் சென்ற போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

    இதையடுத்து, உரிய இழப்பீடு கோரி சின்னதுரையின் மனைவி திருமலை அம்மாள் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 348 இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்ல பேருந்து நிலையத்தில் தயாராக இருந்த பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்தனர்.

    அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அக்கொண்டப்பள்ளியைச் சேர்ந்த சக்கரலப்பா(55) என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு பேருந்தில் இருந்து இறங்கிய போது தவறி கீழே விழுந்ததில் டயரில் சிக்கி கால் ஊனமானது. இதையடுத்து, இழப்பீடு கோரி தருமபுரி சார்பு நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்து 665 இழப்பீடு அளிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் தருமபுரியில் இருந்து சென்னை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai